மோட்டார் சைக்கிளில் சட்டவிரோத பொருளை கொண்டு சென்றவர் கைது!

breaking
தென்தமிழீழம்; திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு கிலோ 150 கிராம் கஞ்சாவைக் கொண்டு சென்ற நபர் ஒருவரை நேற்றிரவு(17) கைது செய்துள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். பேராறு,கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் வவுனியாவிலிருந்து கந்தளாய் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் 2 கிலோ 150 கிராம் கஞ்சாவைக் கொண்டு சென்ற போதே மொறவெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை கைது செய்துள்ளதாகச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் ஹேரொயின் வழக்கொன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலே கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாகவும்,சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதோடு, சந்தேக நபரைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு,திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் முன்னிறுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.