கொழும்பில் தூசித் துகள்கள் அதிகரித்துள்ளதனால் வழி மாசுபாடு குறித்து மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கொழும்பு நகரில் முன்னர் இல்லாத அளவிற்கு காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் தூசி துகள்கள் 100% அதிகரித்துள்ளன என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வட, மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில், அதிக அளவில் வழி மாசுபாடு இருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களைக் காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பனிமூட்டம் போன்ற வானிலை காணப்பட்டதாக வளிமண்டவலவியல் திணைக்களம் தெரிவித்திருந்ததுடன் அது தொடர்பாக பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.