யானைக்குட்டி வைத்திருந்த நீதவான்

breaking
அனுமதிப் பத்திரமின்றி யானைக்குட்டியை வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொழும்பு நீதிமன்ற மேலதிக நீதவான் திலின கமகே உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிரான வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை சார்பில் யாரும் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகாததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நுகேகொட நீதவான் கனிஷ்க விஜேரட்ன இந்த வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளார்.